Wednesday, October 7, 2026

கடல் மார்க்கமான போதைப்பொருள் கடத்தல்: கடந்த ஆண்டில் 343 சந்தேக நபர்கள் கைது


இலங்கை கடற்படையினரால் கடந்த ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 343 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 715 கிலோ ஹெரோயின், 3711 கிலோ கேரள கஞ்சா, 50 கிலோ உள்நாட்டு கஞ்சா, 140 கிலோ அஷீஸ், 11 கிலோ ஐஸ் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு, 92 ஆயிரத்து 572 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 18 உள்நாட்டு மீன்பிடி படகுகளுடன் 187 சந்தேக நபர்களும், ஈரான் படகுடன் 5 ஈரான் பிரஜைகளும், பாக்கிஸ்தான் பிரஜைகள் மூவரும், இரு இந்திய படகுகளுடன் 6 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு வைக்கப்பட்டிருந்த 191 மதுபான போத்தல்களுடன் 8 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர 41 ஆயிரத்து 380 சிகரட்டுக்களும், 1,016,755 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 642 மதன மோதகம் எனப்படும் போதை வில்லைகளுடன் 42 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

you may also like