- by Editor
- 2 years ago
மீண்டும் உக்கிரமடையும் உக்ரைன் - ரஷ்யப் போர்!
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் புதிய முறைமையாக ஆளில்லா விமானங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
அதன் படி கடந்த சனியன்று மீண்டும் ஆரம்பமான இந்த ட்ரோன் தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
ரஷ்யாவின் இராணுவ விமானத் தளத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தென்மேற்கு ரஷ்யாவின் 3 பிராந்தியங்களில் தாக்குதல் நடத்த வந்த உக்ரைன் ட்ரோன்களில், குறைந்தது 35 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன எனவும் ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைனின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் ரஷ்ய இராணுவம் அனுப்பிய 20 ட்ரோன்களும், எக்ஸ்-59 ஏவுகணையும் தாக்கி அழிக்கப்பட்டது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் பகுதிகள் கருங்கடல் கடற்கரையில் உள்ள ஒடெசாக் அருகே உள்ள வீட்டின் மீது விழுந்ததில் ஒருவா் உயிரிழந்தாா் என உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போா் தொடங்கி இரண்டாம் ஆண்டை நெருங்கும் நிலையில், கடந்த ஒரு மாதமாக ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.