Saturday, October 10, 2026

கெஹெலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் கைது!


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று காலை 9 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

அத்துடன், அவருக்கு நீதிமன்றினால் வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


you may also like