- by Editor
- 2 years ago
மாவைக்கு ஜனாதிபதி அநுர அஞ்சலி
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மாவை சேனாதிராஜாவின் புகழுடல் யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது புகழுடலுக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில், நாளைமறுதினம் ஞாயிற்றுக்குழமை இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மாவை சேனாதிராஜாவின் இல்லத்துக்குச் சென்று அன்னாரின் புகழுடலுக்கு தனது அஞ்சலியைச் செலுத்தினார். அத்துடன் மாவை சேனாதிராஜாவின் குடும்பத்தினருக்குத் தனது ஆறுதலையும் ஜனாதிபதி தெரிவித்தார்.