- by Editor
- 2 years ago
மாலைதீவு கடற்படையினரால் தூத்துக்குடி மீனவர்கள் கைது
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
மாலைதீவு கடற்படையினரால் தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்நத மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், தூத்துக்குடி, மதுரையைச் சேர்ந்த 12 பேர் கடந்த 1ஆம் திகதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
கடந்த 23 ஆம் திகதி மாலைதீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாலைதீவு கடல் பகுதிக்குள் படகு சென்று விட்டன என்று கூறப்படுகிறது.
அப்போது, அங்கு ரோந்து வந்த மாலைதீவு கடற்படையினர், 12 மீனவர்களையும் கைது செய்து, மாலி துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த மீனவர்களின் உறவினர்கள், கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, 12 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.