Friday, October 9, 2026

மஹிந்த சிங்கம்: மனோஜ் வீராப்பு பேச்சு


"விடுதலைப்புலிகளுக்கு முடிவு கட்டிய மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் திணறமாட்டார். அவர் ஒரு சிங்கம்."

- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், ஆளும் தரப்பினரும் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும் அவர் கடும் எதிர்ப்பு வெளியிட்டார்.

"தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள், மஹிந்த ராஜபக்ஷவை நேசிப்பவர்கள். எனவே, போரை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்தவைப் பாதுகாப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும்." - என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.


you may also like