- by Editor
- 2 years ago
மஹர சிறைச்சாலை பதற்றம் - மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான பொலிஸ் ஊரடங்கு நீக்கம்
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று (01) முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்தும் நோக்கில், மறுஅறிவித்தல் வரை அமுலுக்கு வரும் வகையில் நேற்று பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 246/கெந்தலியத்த பாலுவ – மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ – வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
எனினும், மஹர சிறைச்சாலையில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மேற்கண்ட பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.