- by Editor
- 2 years ago
மரணத்தின் பின்னும் சொந்த ஊரைத் தேடிய இயக்குனர் இமயத்தின் இரகசியம்
-
- by Editor,
- 3 months ago
- in சினிமா செய்திகள்
தமிழ்த் திரையுலகில் மண் வாசனை மாறாத திரைப்படங்களை இயக்கி தனக்கென்று தனிப்பாதையை போட்டு பயணித்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவரது மரணம் திரையுலகினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது திரைப்படங்கள் மூலமாக தென் மாவட்ட கிராம மக்களின் உடல் மொழியை அப்படியே கேமராவுக்குள் அடைத்து பெரியத் திரையில் பிரமிப்பாக விரித்துக் காட்டிய பாரதிராஜா. தமிழ்த் திரை உலகில் உயரிய இடத்தை பிடிப்பதற்குள் கடுமையான போராட்டங்களை சந்தித்து உள்ளார்.
குடும்பத்தினர் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்த பாரதிராஜா அதன் காரணமாகவே சின்னசாமி என்கிற தனது பெயரை பாரதிராஜாவாக மாற்றிக் கொண்டார். தங்கை பாரதி, தம்பி ஜெயராஜ் ஆகியோரது பெயர்களை சேர்த்து பாரதிராஜாவாக திரையுலகில் நுழைந்த அவர், இயக்குனர்களின் ராஜாவாகவே திகழ்ந்தார் என்று கூறினால், அது மிகையாகாது.
‘16 வயதினிலே’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த பாரதிராஜா கிராமத்து மண், மனம் சார்ந்த படங்களுடன் அதிரடியான திகில் படங்களையும் இயக்கி இருக்கிறார். இருப்பினும் பாரதிராஜா என்றவுடன், நம் எல்லோர் மனதிலும் தோன்றுவது அவரது கிராமம் சார்ந்த மண்வாசனை படங்கள் தான்.
அந்த வகையில் கிராமப்புற மக்களின் வாழ்வியலை முழுமையாக அவர் படம்பிடித்து காட்டியிருப்பார். இப்படி, கிராமிய படங்களை அதிகமாக இயக்கி இருந்தாலும் பாரதிராஜாவுக்குள் ஆடைகளாக ஜீன்ஸ் பேண்டும், டீ-சர்ட்டுகளுமே இருந்துள்ளன.
இதனால் பலர் கிராமத்து படங்களை இயக்கி பாரதிராஜா பெயர் பெற்றிருந்தாலும் அவரும் முழுமையாக நகரவாசியாக ஆகிவிட்டாரோ என்றே நினைத்திருப்பார்கள். ஆனால் பாரதிராஜாவோ தலைநகரான சென்னையில் குடியேறிய போதும் தனது சொந்தப் பந்தங்கள் உறவு முறைகளை மறக்காமலேயே இருந்து வந்தார்.
அடிக்கடி ஊருக்கு செல்லும் அவர் உற்றார் உறவினர்களோடு அமர்ந்து உணவருந்துவது, நீண்ட நேரம் பழைய நினைவுகளை அசைப்போட்டபடி உரையாடுவது ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டி வந்து உள்ளார். இதுவே அவரது மரணத்திற்கு பிறகும் சொந்த ஊரில் துயில் கொள்ள வேண்டும் என்கிற உணர்வை பாரதிராஜாவுக்குள் ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் காரணமாக தனது மகள் ஜனனியிடம் தனது ஆசையை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.