Monday, October 12, 2026

மதுபானத்திற்கு பணம் தராததால் தாயை தள்ளி கொன்ற இளைஞன் கைது


மட்டக்களப்பு சித்தாண்டியில், மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா வழங்க மறுத்த தாயைத் தள்ளி விழுத்தி கொலை செய்ததாக 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (17) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சித்தாண்டி 4ஆம் பிரிவு பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய குமாரசாமி வசந்தா உயிரிழந்தார்.

சம்பவ தினம் மாலை சுமார் 6.00 மணியளவில், மகன் தாயிடம் மது அருந்துவதற்காக 1,000 ரூபா கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை எனத் தாய் கூறியதையடுத்து, ஆத்திரமடைந்த அவர் தாயை பலமாகத் தள்ளியதாக கூறப்படுகிறது.

இதனால் சமநிலை இழந்து கீழே விழுந்த தாயின் தலை தரையில் மோதி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் சென்ற இளைஞனை பொலிஸார் தேடி கைது செய்தனர். உயிரிழந்தவரின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

you may also like