- by Editor
- 2 years ago
மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
கண்டி – மஹியங்கனை வீதியின் தெல்தெனிய, ரம்புக்வெல்ல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து பழக்கடை ஒன்றின் மீது விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்றும், அவர் அந்தப் பழக்கடையின் உரிமையாளர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்மேடு சரிந்து விழுந்ததையடுத்து மண்ணுக்குள் புதைந்து கிடந்த அந்தப் பெண்ணைப் பொலிஸார் பிரதேச மக்களின் உதவியோடு மீட்டனர்.
அவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.