- by Editor
- 1 year ago
மட்டக்களப்பில் கறுப்பு யூலை - மனித புதைகுழிகளுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
மட்டக்களப்பில் கறுப்பு யூலை - மனித புதைகுழிகளுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!!
மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (28) கறுப்பு யூலை பேரவலத்தை நினைவுகூர்ந்தும், செம்மணி உள்ளிட்ட வடக்கு - கிழக்கில் நிகழ்ந்த மனித படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரியும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ குருமார்கள், காணாமல் போனோர் உறவுகளின் சங்கத்தினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
"கறுப்பு யூலை: இலங்கை அரச பயங்கரவாதத்தின் கொடூரம்", "செம்மணி புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டும்", "தமிழ் தாயகத்தில் மனித புதைகுழிகளுக்கு நீதி வேண்டும்", "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும்" உள்ளிட்ட பதாதைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி, சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.