- by Editor
- 2 years ago
மக்களை ஏமாற்றும் அநுர அரசு - சஜித் கருத்து!
மக்களை ஏமாற்றும் அநுர அரசு - சஜித் கருத்து!
தற்போதைய அநுர அரசும் முந்தைய அரசாங்கம் போலவே பொய்களையும், ஏமாற்றுதல்களையும் செய்துவருவதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
பராட்டே சட்டம் இன்று முதல் மீண்டும் அமுலுக்கு வருவதனால், சிரமங்களை எதிர்கொள்ளும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் குறித்து விசேட கருத்தை வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கருத்து,
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் சொத்துக்களை ஏலம் விடுவது அவர்களின் வணிக முயற்சிகளை சரிவுக்கு இட்டுச் செல்கிறன்றன. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பாதிக்கிறது. வேலையின்மையை அதிகரிக்கச் செய்கின்றன. நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை குறைக்கின்றது.
நாட்டில் காணப்பட்ட முந்தைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஏமாற்றியே வந்துள்ளன.
தேர்தலை நோக்கமாகக் கொண்டு பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்தனர். தற்போது இந்த அரசாங்கமும் முந்தைய அரசாங்கத்தை போலவே எந்த சாதகமான தீர்வுகளையுமோ அல்லது மாற்றுத் தீர்வுகளையோ பெற்றுக் கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.