- by Editor
- 1 year ago
மக்களவை தேர்தலை முன்னிட்டு 8 மாநிலங்களுக்கு தேர்தல் குழு: காங்கிரஸ் புதிய வியூகம்
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
மக்களவை தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக 8 மாநிலங்களுக்கு தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
"ராஜஸ்தான், கேரளா, தெலுங்கானா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய 8 மாநிலங்களில் தேர்தல் குழுவை அமைக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.
அத்துடன், மத்திய பிரதேச தேர்தல் குழு மற்றும் அரசியல் விவகாரக் குழு அமைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில பிரதேச காங்கிரஸ் குழு தலைவராக கோவிந்த் சிங் தோதஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டும் உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.
கேரள தேர்தல் குழு தலைவராக கே.சுதாகர் நியமிக்கப்பட்டார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பிரதேச தேர்தல் குழு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இமாச்சல தலைவராக பிரதீபா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, மத்திய பிரதேஷில் ஜிதேந்திர சிங் தலைமையில் அரசியல் விவகாரக் குழுவையும் காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
சத்தீஸ்கர் தேர்தல் குழுவின் தலைவராக தீபக் பைஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூரில் பிரதேச தேர்தல் குழுவின் தலைவராக கே மேகசந்திர சிங்நியமிக்கப்பட்டுள்ளார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.