Wednesday, October 7, 2026

போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் சரிந்த எண்ணெய் விலை


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றன.

சமீபத்தில் அதிகரித்திருந்த விலைகள் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100.8 அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது.

அதேவேளை, சர்வதேச சந்தையில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.5 அமெரிக்க டாலராக நிலவுகிறது.

இதே நேரத்தில் இயற்கை எரிவாயு (Natural Gas) விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அதன் விலை 2.879 அமெரிக்க டாலராக உயர்வை பதிவு செய்துள்ளது.

பிராந்திய பதற்றங்கள் தொடரும் நிலையில் எரிசக்தி சந்தை மேலும் ஊசலாட்டம் காணக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

you may also like