- by Editor
- 1 year ago
போக்குவரத்து அபராதம் செலுத்துவது தொடர்பில் விசேட அறிவிப்பு
-
- by Editor,
- 1 week ago
- in இலங்கை செய்திகள்
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களை எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அனைத்து காவல் நிலையங்களிலும் செலுத்த முடியும் என பிரதி காவல்துறைமா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சில் இன்று (28) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதங்களை எந்த நாளிலும், எந்த நேரத்திலும் நாட்டிலுள்ள எந்தவொரு காவல் நிலையத்திலும் செலுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய நடைமுறை மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை செலுத்தும் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு மேலும் இலகுவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.