Wednesday, October 7, 2026

பெண்களின் வலிமை, துணிவு கொண்டாடிய மகளிர் தின விழா மன்னாரில்


'பெண்களின் வலிமை, துணிவு மற்றும் சாதனைகளை கொண்டாடுவோம்' எனும் கருப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னாரில் இடம் பெற்றது.

 மன்னார் நகர சிறுவர் பூங்கா அரங்கில் மன்னார் குடிசார் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பகுதி பெண்கள் அமைப்புகள் கூட்டாக இணைந்து சர்வதேச மகளிர் தின நிகழ்வை முன்னெடுத்திருந்தன.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் பிரதேச செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மகளிர் அமைப்புகளின் பிரதிதிகளும் பங்குபற்றினர்.

இந்த நிகழ்வில் சாதனைப் பெண்கள் மற்றும் பெண்களோடு தோள் நின்று உழைக்கும் ஆண்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதையடுத்து கிறீன் பீஸ் சவுத் ஏசியா (GREENPEACE SOUTH ASIA ) அமைப்பின் அனுசரனையுடன் மன்னார் பிரதான நூலகச் சுவரில் பெண்களால் வரையப்பட்ட பிரம்மாண்டமான சுவரோவியம் காட்சிப்படுத்தலுக்காக வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 'காலநிலை நீதிக்கான பெண்கள்' எனும் தொனிப்பொருளில் இந்த ஓவியம் பெண்களினால் வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மன்னார் பொது நூலகத்தின் வெளிப்புறச் சுவரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சமூக சுவரோவியம், கலை, அறிவியல் மற்றும் சமூகத்தின் குரல்களை ஒன்றிணைத்து, இந்தத் தீவின் வளமான உயிரியல் பல் வகைமையையும் காலநிலை பேரிடர்களுக்கு எதிராக பெண்கள் காட்டும் தலைமையையும் வெளிச்சமிட்டு காட்டுகின்றமை சிறப்பம்சமாகும்.

you may also like