Wednesday, October 7, 2026

புலிச் சின்னம், பிரபாகரனின் படம் பொறித்த 'ரி சேர்ட்' அணிந்த இளைஞர் கைது!


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

தென்மராட்சி, கொடிகாமம் - ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டார்.

 கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் படங்கள் பொறித்த ஆடை அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அவர் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேகநபரிடம் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர் என்று அறியமுடிகின்றது.

you may also like