Saturday, October 10, 2026

புதுக்குடியிருப்பில் பெண்ணின் சடலம்


முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் - முள்ளுக்காடு வயல் வெளிப்பகுதியில் இருந்து வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தேவிபுரம் பகுதியைச் சேர்ந்த மார்கண்டு பாக்கியம் என்பவரே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மேலதிக விசாரணைகளைப் புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

you may also like