Wednesday, October 7, 2026

புதிய பொலிஸ்மா அதிபராக தென்னக்கோன் நியமனம்


சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் அரசமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால் நேற்றுப் பிற்பகல் தேசபந்து தென்னக்கோனிடம் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

you may also like