- by Editor
- 4 months ago
வடக்கு மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக இரண்டு திட்டங்கள்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
வட மாகாண மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு குடிநீர்த் திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன.
பாலியாறு திட்டம் மற்றும் மல்லாவி குடிநீர்த் திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பாலியாறு குடிநீர் திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வெல்லாங்குளம் பகுதியில் நேற்று நடைபெற்றது.
நீர் வழங்கல் , தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வட மகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் குணசீலன் திலீபன், திட்டப் பொறியிலாளர்கள், மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், வெல்லாங்குளம் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கட்டடத்தில் பாலியாறு குடிநீர் திட்டத்திற்கான அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது.