Thursday, October 8, 2026

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக ஏன் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்: மோடியை சாடினார் ராகுல் காந்தி


பிரதமர் நரேந்திர மோடி தன்னை ஏன் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு 7 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்த நிலையில், சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் நடந்த தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதமர் மோடி ஒவ்வொரு மேடையிலும் பேசும்போது நான் ஒரு ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால் நான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பற்றிப் பேசும்போது, இந்தியாவில் சாதியே கிடையாது. அதைத் தாண்டி சாதி இருக்கிறதென்றால், அது ஏழை என்ற ஒரேயொரு சாதிதான் என்று சொல்கிறார். பிறகு ஏன் பிரதமர் மோடி தன்னை ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

you may also like