- by Editor
- 2 years ago
பிரம்மோஸ் ஏவுகணைகளை பெற 17 நாடுகள் விருப்பம் !
-
- by Editor,
- 1 year ago
- in உலக செய்திகள்
பிரம்மோஸ் ஏவுகணைகளை பெற 17 நாடுகள் விருப்பம் !
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு 17க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரம்மோஸ் ஏவுகணை இந்தியா, ரஷ்யாவின் கூட்டுத் தயாரிப்பு என்பதால் ரஷ்ய இராணுவமும் பிரம்மோஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ் ஏவுகணை ரஷ்யாவில் ‘பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்’ என்ற பெயரில் அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் ஏற்கெனவே பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கி எல்லைப் பகுதிகளில் நிறுவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது 17க்கும் மேற்பட்ட நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக பாதுகாப்புத் துறை நிபுணர்கள், ஆசிய நாடுகள், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கவே விரும்புவதாகவும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.