- by Editor
- 1 year ago
பாதாள உலகக் குற்றவாளி ‘ஹரக் கட்டா’ விவகாரம் - மௌனம் கலைத்த முன்னாள் ஜனாதிபதி ரணில்
-
- by Editor,
- 3 months ago
- in இலங்கை செய்திகள்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு விஜயதாச ராஜபக்ஷவின் மகன் கைது செய்யப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் இல்லத்துக்குச் சென்றதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, ரணில் விக்கிரமசிங்க பல எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து விஜயதாச ராஜபக்ஷவை சந்தித்து, அவரது நலம் விசாரித்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் பாதாள உலகக் குற்றவாளியான நந்துன் சிந்தக விக்கிரமரத்ன, என அழைக்கப்படும் ‘ஹரக் கட்டா’வின் கைது மற்றும் தடுப்புக்காவல் தொடர்பாக உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி அங்கு தெரிவித்ததாகவும் சண்டே டைம்ஸ் குறிப்பிடுகிறது.
அத்துடன், இந்த விவகாரத்தில் எந்தவொரு தனிநபரும் தலையிட முடியாது என்றும், அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிலையில் ‘ஹரக் கட்டா’ தொடர்பான அனைத்து ஆவணங்களும் தனது ஒப்புதலுக்காக ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கியதாக கூறப்படுகிறது.
‘ஹரக் கட்டா’வை முறையற்ற வகையில் பாதுகாத்தார் என்ற குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி நிராகரித்ததாகவும், அரச காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பொறுப்பாகும் எனவும் அவர் வலியுறுத்தியதாக அறிக்கை தெரிவிக்கிறது.
இதேவேளை, ஒரு வழக்கில் செல்வாக்கு செலுத்த பணம் கோரப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தின்போது, விஜயதாச ராஜபக்ஷவும் அவரது மகனும் துபாயில் இருந்ததாக தெரியவந்ததை அடுத்து, அவரும் தற்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசாரணைக்குட்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த காலகட்டத்தில் அவர்களது துபாய் பயணத்துக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் சண்டே டைம்ஸ் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.