- by Editor
- 2 years ago
பலத்த இடி மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை
-
- by Editor,
- 2 weeks ago
- in இலங்கை செய்திகள்
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கும் பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் மின்னல் ஆபத்து: குறித்த பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், பலத்த இடி மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
பலத்த காற்று: இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடி மின்னலினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் ஆபத்துகளைத் தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.