- by Editor
- 2 years ago
பனாமாவில் மீண்டும் நிலநடுக்கம் - 6 ரிக்டர் அளவில் பதிவு
-
- by Editor,
- 1 day ago
- in உலக செய்திகள்
பனாமாவில் திங்கட்கிழமையன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 35 கிலோமீற்றர் (22 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று பனாமாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதனால் நாட்டின் மத்திய மாகாணங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்தன.
அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகள் பதிவாகியுள்ள நிலையில், நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு வார இறுதியில் அந்நாட்டு அரசாங்கம் தேசிய அவசரநிலையை அறிவித்தது.
இந்த அனர்த்தத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. எனினும், குறைந்தது 27 பேர் காயமடைந்துள்ளதுடன், சுமார் 900 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அவசரகால அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தொலைதூரப் பகுதிகளில் சேத மதிப்பீட்டுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால், பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
லாஸ் சாண்டோஸ் (Los Santos), கோக்லே (Coclé), வெராகுவாஸ் (Veraguas) மற்றும் ஹெர்ரேரா (Herrera) ஆகிய மாகாணங்கள் நிலநடுக்கத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.