Friday, October 9, 2026

நீதிபதிகளின் சம்பளத்தில் APIT வரி அறவிடுவது சட்டபூர்வமானது - உயர் நீதிமன்றம்


உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின் பிரகாரம், நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண தனிநபர் வருமான வரியான APIT-ஐ அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேற்கொண்ட தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை சவால் செய்து, மேல் நீதிமன்ற நீதியரசர்கள் சங்கம், மாவட்ட நீதிபதிகள், நீதிவான்கள் மற்றும் மேலதிக நீதிவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீதித்துறை உத்தியோகத்தர்கள் சங்கம், அத்துடன் தொழிலாளர் தீர்ப்பாயத் தலைவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் ஆகியன உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், அவற்றை நிராகரித்ததுடன், உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து APIT வரியை அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு உட்பட்டது எனவும் அறிவித்துள்ளது.

you may also like