- by Editor
- 2 years ago
இன்று 24 மணி நேர நீர்வெட்டு
-
- by Editor,
- 3 months ago
- in இலங்கை செய்திகள்
பாதுக்கை, ஹோமாகம, கொட்டாவை, பன்னிப்பிட்டிய மற்றும் பெலன்வத்த உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று (24) முதல் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், நீர் பயன்பாட்டை சிக்கனமாக மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நீர்விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பும் வரை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.