Sunday, October 11, 2026

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு ஒக்டோபர் 29 வரை ஒத்திவைப்பு


பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

இதன்போது, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கு அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவும் இன்று காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்கு தொடர்பான மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may also like