Thursday, October 8, 2026

நாணய நிதியத்தின் திறன் மேம்பாட்டுக் குழு இலங்கையில் நிலைகொண்டு செயற்படும்!


நிதி விவகாரங்களில் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் திறன் மேம்பாட்டு பணிக்குழு ஒன்று இலங்கையில் இருந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், முக்கியமான பொருளாதார பிரச்சினைகளில் தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சிகளை இந்தக் குழு வழங்கவுள்ளது.

எனினும் இந்த பணி, சர்வதேச நாணய நிதியத்தின் மறு ஆய்வுப் பணிகளிலிருந்து வேறுபட்டது என நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


you may also like