Sunday, October 4, 2026

போக்குவரத்து விதிகளை மீறிய 8000 பேருக்கு எதிராக நடவடிக்கை


கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

பண்டிகை காலத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளும் நோக்கில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 8068 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 401 பேரும், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்திய 101 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.


you may also like