- by Editor
- 8 months ago
நாட்டில் 214 நாட்களில் 76 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் - 41 பேர் பலி !
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
நாட்டில் 214 நாட்களில் 76 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் - 41 பேர் பலி !
நாட்டில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 03 ஆம் திகதி வரை 76 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாத்தறை கபுகொட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திலும், அம்பலாந்தோட்டை ஹங்காம, பிங்கம பகுதியில் சனிக்கிழமை (02) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திலும் ஒருவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.