Friday, October 9, 2026

நாட்டில் டெங்கு பாதிப்பு 76 ஆயிரத்தைத் தாண்டியது


நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தப் பிரிவு நேற்று (19) இரவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இதுவரை 76,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 53 டெங்கு மரணங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

டெங்கு பாதிப்பு அதிகமாகப் பதிவாகியுள்ள மாவட்டமாக கம்பஹா மாவட்டம் காணப்படுகிறது. அங்கு இந்த ஆண்டின் இதுவரை 15,910 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அடுத்ததாக, கொழும்பு மாவட்டத்தில் 15,110 பேருக்கு டெங்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாத்தறை மாவட்டத்தில் 5,330 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,111 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 5,010 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 4,295 பேரும், காலி மாவட்டத்தில் 4,260 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மட்டும் 20,666 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

you may also like