- by Editor
- 2 years ago
நாடாளுமன்ற அதிகாரிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் நாடாளுமன்றத்தின் பல அதிகாரிகள் இன்று (03) முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே குறித்த அதிகாரிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான ஆவணங்களுடனேயே நாடாளுமன்ற அதிகாரிகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.