- by Editor
- 2 years ago
நட்சத்திர வீரர்களைக் காப்பாற்ற ‘கோடி’களில் வலை விரிக்கும் அவுஸ்திரேலியா
-
- by Editor,
- 5 months ago
- in விளையாட்டு செய்திகள்
சர்வதேச கிரிக்கெட்டைக் காட்டிலும் ஐபிஎல் உள்ளிட்ட உலகின் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் வீரர்கள் பல மடங்கு அதிக வருமானம் ஈட்டும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பல நட்சத்திர வீரர்கள் தேசிய அணியை விட பிரபல லீக் தொடர்களுக்கே முன்னுரிமை வழங்க தொடங்கியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், தங்கள் முன்னணி வீரர்களை தேசிய அணியில் தொடர்ந்து வைத்திருக்க கிரிக்கெட் வாரியங்கள் புதிய திட்டங்களை வகுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அவுஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித் தலைவரான 32 வயதான பேட் கம்மின்ஸுக்கு ஆண்டுக்கு சுமார் 37 கோடி ரூபாய் வழங்கும் வகையில் 3 ஆண்டுகள் காலப்பகுதிக்கான புதிய ஒப்பந்தத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2029 ஆம் ஆண்டு வரை தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடுவதை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த விசேட ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை கம்மின்ஸ் ஏற்றுக்கொண்டால், மொத்தமாக 100 கோடி ரூபாவுக்கும் அதிக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இதனால் ஐபிஎல் உள்ளிட்ட சில டி20 லீக் போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகளை அவர் குறைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோன்ற ஒப்பந்தங்களை டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோருக்கும் வழங்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.