- by Editor
- 2 years ago
தொடரை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்று !!
தொடரை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்று !!
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை பெற்றுள்ள நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும், இறுதியுமான போட்டி இன்று கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணியும், இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியும் வெற்றிபெற்றன. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் இறுதியாக நடைபெற்ற இரண்டு ஒருநாள் தொடர்களை பங்களாதேஷ் அணி (2021, 2023) ஆண்டுகளில் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறது.
இலங்கை அணி 2019ஆம் ஆண்டு சொந்த மண்ணில் வைத்து 3-0 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை கைப்பற்றியதன் பின் தற்போது 6 ஆண்டுகளாக பங்களாதேஷ் அணியுடன் ஒருநாள் தொடரை கைப்பற்றவில்லை.
எனவே, இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளின் எந்த அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.