Thursday, October 8, 2026

தொடரை தக்க வைக்கும் முனைப்போடு களமிறங்கும் இந்தியா!!


தொடரை தக்க வைக்கும் முனைப்போடு களமிறங்கும் இந்தியா!!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியானது இங்கிலாந்தின் மன்செஸ்டரில் நாளை புதன்கிழமை (23) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் நிதிஷ் குமார் ரெட்டி காயம் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக சாய் சுதர்ஷன் அணியில் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது.

மேலும், இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் டீப் உபாதைக்குள்ளாகிய நிலையில் அவரை அன்ஷுல் கம்போஜ் அணியில் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்தும் அணியும், இரண்டாவது போட்டியில் இந்தியா அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தும் வென்றுள்ளது

இந் நிலையில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தொடரைத் தக்க வைப்பதற்கு இப்போட்டியில் கட்டாயம் வென்றே ஆகா வேண்டிய கட்டாயத்தில் களம் காண உள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may also like