Thursday, October 8, 2026

சுரேஷ் சலே மனு மீதான விசாரணை 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பு


 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய வகையில் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிராக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவுடன் தொடர்புடைய இடையீட்டு மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (10) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இடையீட்டு மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தமது வாதங்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து, மேலதிக விடயங்களை ஆராய்வதற்காக மனு மீதான விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

you may also like