- by Editor
- 1 year ago
தெல்தெனிய கொலை வழக்கில் காதலனும் மனைவியும் யாழில் கைது
-
- by Editor,
- 3 months ago
- in இலங்கை செய்திகள்
தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றின் உள்ளிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக, பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட உயிரிழந்த பெண்ணின் காதலனும் அவரது மனைவியும் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தகவலின்படி, நேற்று (23) குறித்த தம்பதியினர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை யாழ்ப்பாணப் பகுதியில் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து நுவரெலியா மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.