- by Editor
- 5 months ago
தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்
-
- by Editor,
- 2 weeks ago
- in இலங்கை செய்திகள்
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஊவா மாகாணத்திலும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.