- by Editor
- 1 year ago
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக இலஞ்ச வழக்கு தாக்கல்
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக இலஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு, முதலீட்டுச் சபை தொடர்பான விவகாரம் ஒன்றை வர்த்தகர் ஒருவருக்கு சாதகமாக முடித்துக் கொடுப்பதற்காக 10 இலட்சம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றதாக அவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.