Saturday, October 10, 2026

தென்னக்கோனின் ரிட் மனு நிராகரிப்பு உடனடியாகக் கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு


2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் தன்னைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த ரிட் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதிவான் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் சரத் திஸாநாயக்க ஆகியோரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

you may also like