- by Editor
- 3 weeks ago
தீராக் காதலால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளைஞர்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இசை நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் களுத்துறையில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடையதாகக் கைதான சந்தேகநபர், பெண் ஒருவரைத் திருமணம் செய்து தற்போது அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், அந்தப் பெண், களுத்துறை, கமகொட குமுது மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்வையிட வந்துள்ளார்.
இதன்போது அவர் பணிபுரியும் ஆடைத்தொழிற்சாலையின் இளைஞர் ஒருவருடன் நடனமாடிக் கொண்டிருந்தார்.
அப்போது கோபமடைந்த சந்தேகநபர், நடனமாடிக்கொண்டிருந்த இளைஞரின் கழுத்தைக் கத்தியால் அறுத்துள்ளார்.
மேற்படி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.