Thursday, October 8, 2026

தீபச்செல்வனை விசாரணைக்கு உட்படுத்திய ரி.ஐ.டி.


 ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நேற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தமைக்காகத் தமிழ்த் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரான தீபச்செல்வனிடம் இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா.யோகேந்திரநாதனின் '34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு' என்ற புத்தகம் எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமையில் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்தப் புத்தக வெளியீடு தொடர்பாக நேற்று விசாரணை இடம்பெற்றது என்று தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த புத்தகம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்கில் எழுதப்பட்டதா என்றும் விசாரணையின்போது கேட்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவை 'நீங்கள் ஏன் நடத்தினீர்கள்?' என்று கேட்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியின் மூத்த எழுத்தளார் நா.யோகேந்திரநாதனை மதிப்பளிப்புச் செய்யும் நோக்கிலேயே வெளியீட்டு விழாவை நடத்தியதாகத் தான் கூறினார் என்றும் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நேற்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட விசாரணை சுமார் இரண்டரை மணிநேரத்துக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

you may also like