Sunday, October 11, 2026

தினேஷ் கார்த்திக்கிற்கு பெங்களூர் அணியில் புதிய பதவி


ஐபிஎல் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டிவிட்டர் பதிவில்,

“எங்கள் விக்கெட் காப்பாளரை வரவேற்கிறோம்.

தினேஷ் கார்த்திக், புதிய அவதாரமாக RCB க்கு திரும்புகிறார்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "கிரிக்கெட்டிலிருந்து மனிதனை வெளியேற்றலாம்.

ஆனால் மனிதனிடமிருந்து கிரிக்கெட்டைப் பிரிக்க முடியாது.

அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.

அவர் அணியின் 12ஆவது மேன் ஆர்மி (Man Army)!” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த சில ஆண்டுகளாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஃபினிஷராக சிறப்பாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக், அண்மையில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வுபெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


you may also like