Wednesday, October 7, 2026

திடீரென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை


உலகளாவிய எரிசக்தி சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (10) சற்று உயர்வைப் பதிவு செய்துள்ளன.

அதன்படி, இன்று காலை 6.40 மணியளவில் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.95 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது 0.85 சதவீத அதிகரிப்பாகும்.

அதேபோல், பிரெண்ட் (Brent Crude Oil) ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 92.33 டொலர்களாக உயர்ந்துள்ளது. இது 0.96 சதவீத உயர்வாக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மர்பன் (Murban Crude Oil) கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 88.24 டொலர்களாகக் குறைந்துள்ளது. இது 3.98 சதவீத வீழ்ச்சியாகும்.

உலக சந்தையில் எண்ணெய் விலைகள் கலவையான போக்கைக் காட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

you may also like