- by Editor
- 6 months ago
தம்மிக்க பெரேராவே ஜனாதிபதி வேட்பாளர் என உதயங்க வீரதுங்க கூறுகின்றார்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அந்தக் கட்சியின் உறுப்பினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் போது, மொட்டுச் சின்னத்தில் பிரத்தியேக வேட்பாளரை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும் அந்த கட்சி தம்மிக்க பெரேராவையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவிருப்பதாக உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.