- by Editor
- 2 years ago
தமிழருக்காகத் தென்னிலங்கையில் இருந்து குரல் கொடுத்த விக்கிரமபாகு காலமானார்!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இலங்கையின் சிரேஷ்ட இடதுசாரி தலைவர்களுள் ஒருவரான நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன சுகவீனம் காரணமாக தனது 81 ஆவது வயதில் நேற்று இரவு காலமானார்.
நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் காலமானார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
1943ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி லுணுகலையில் பிறந்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, மத்துகமவில் தனது ஆரம்பக் கல்வியையும், பின்னர் உயர்கல்வியை கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் பயின்றார்.
அதன்பின்னர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ததுடன், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1970ஆம் ஆண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார்.
இதனையடுத்து நாடு திரும்பிய அவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
1962ஆம் ஆண்டு விக்கிரமபாகு கருணாரத்ன, லங்கா சம சமாஜக் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அவர் தனது காலத்தில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.