Sunday, October 11, 2026

தமிழகம் உள்ளிடட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனையில் 44 பேர் கைது


மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் பங்களாதேஷத்தினார் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி, எல்லைப்புற மற்றும் தொலைதூர மாநிலங்களில் போலி அடையாள ஆவணங்களுடன் வசிப்பது அதிகரித்து வருகிறது.

இவர்களை சில கும்பல்கள் ஊடுருவச் செய்வதும் இவர்களுக்கு சர்வதேச தொடர்புகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இவ்வாறு ஆட்கடத்தலில் ஈடுபடும் 5 கும்பல்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 8 மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியாணா, மேற்கு வங்கம், திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் ஜம்முகாஷ்மீர், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 55 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்தந்த மாநில போலீசார் இந்த சோதனைக்கு உதவினர்.

இந்த சோதனையில் 4 கும்பல்களை சேர்ந்த 44 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக திரிபுராவில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கடுத்து கர்நாடகாவில் 10, அசாமில் 5, மேற்கு வங்கத்தில் 3, தமிழ்நாட்டில் 2, புதுச்சேரி, தெலங்கானா, ஹரியாணா ஆகியவற்றில் தலா ஒருவர் என 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கையடக்க தொலைபேசிகள் , சிம் கார்டுகள், பென் டிரைவ்கள் போன்ற டிஜிட்டல் சாதனங்கள், போலி ஆதார் மற்றும் .20 லட்சம் ரூபா பணம் , 4,550 அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் அதற்கு ஆதரவான வலையமைப்பை தகர்ப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்தது. 

you may also like