- by Editor
- 2 years ago
வேட்பாளராகப் போட்டியிட பஸிலுக்கும் விருப்பமாம்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பஸில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஆர்வமாகவுள்ளார் என்று அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் காரணமாக அவரது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான ஆலோசனைகளை அவர் நடத்தி வருகின்றார். எதிர்காலத்தில் இது தொடர்பான இறுதி முடிவை எடுக்கக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் பஸில் பேச்சு நடத்தவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இதுவரை 4 பேர் விருப்பத்தை வெளியிட்டுள்ளனர் என்று அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் தெரிவித்திருந்தார்.
அத்துடன் தற்போது ஐந்தாவது நபராக பஸில் ராஜபக்ஷவும் ஜனாதிபதி வேட்பாளராகும் விருப்பத்தில் உள்ளார். இதனால் அக்கட்சி பல்வேறு நெருக்கடிகளை எதிர்வரும் நாள்களில் சந்திக்க நேரிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை பொதுஜன பெரமுனவின் பல முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.