Thursday, October 8, 2026

தமிழகத்தில் ஆளுநரும், முதல்வரும் பேசி தீர்வு காணலாம்: தமிழிசை யோசனை


சண்டை போடவேண்டியதில்லை. தமிழகத்திலும் முதல்வரும், ஆளுநரும் உட்காந்து பேசி தீர்வு காணலாம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதயநாள் விழா இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழகத்திலும் முதல்வரும், ஆளுநரும் உட்காந்து பேசி தீர்வு காணலாம். சும்மா சண்டையே போட வேண்டியதில்லை. தெலங்கானாவிலும் இதையே சொல்கிறேன். கருத்து வேறுபாடுகளோடு இருக்கும்போது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. கருத்து ஒற்றுமை தேவை. அது புதுச்சேரியில் இருக்கவேண்டும். அது இருப்பதுபோல் நான் பார்த்து கொள்வேன். தீவிரவாதத்துக்கு எங்கேயும் இடம் கிடையாது என்று தெரிவித்துள்ளார். 

you may also like